வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala
Last Modified: புதன், 9 டிசம்பர் 2015 (12:48 IST)

வேப்பிலையின் அற்புத குணங்களை அறிவோம்

வேப்பிலை என்றதும் முகம் சுளித்துக்கொள்வர். ஏனென்றால் அது மிகவும் கசப்பாக இருக்கும். இளந்தளிர் அவ்வளவாக கசக்காது. அத்துடன் இளந்தளிரில் வைட்டமின் ஏ என்ற உயிர்ச்சத்து அதிகமுள்ளது. அத்துடன் இரும்பு, சுண்ணாம்பு, புரதம் போன்ற சத்துக்களும் சேர்ந்துள்ளன.


 

 
1. வேப்பிலைக் கொழுந்தை சுத்தம் செய்து துவையலாக அரைத்துச் சாப்பிட ருசியாக இருக்கும். உடம்பிற்கும் நல்லது. இதற்கு விஷக் கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் உண்டு.
 
2. இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலிலுள்ள விஷ வாயுக்களைக் கூட வெளியேற்றும் தன்மை இதற்குண்டு. அஜீரணத்தையும் போக்கி எளிதில் ஜீரணமளிக்கவல்லது.
 
3. சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்படும். அதற்கு வேப்பிலைக் கொழுந்தை அரைத்து அவற்றுடன் சிறிதளவு பெருங்காயத்தையும் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் கொடுத்தால் போதும் வயிற்றுவலி போய்விடும்.
 
4. சிறு குழந்தைகளுக்கு சீதள மிகுதியால் தொல்லை ஏற்படும்போது வேப்பிலை கொழுந்துடன் ஒரு மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம் சேர்த்து மைபோல அரைத்து சிறிது நீரில் கலந்து உள்ளுக்கு கொடுக்க தொல்லை நீங்கும்.
 
5. அம்மை நோய் ஏற்படும் உடலில் தடிப்பு ஏற்படுவதுண்டு. இதனால் அரிப்பும், எரிச்சலும் இருக்கும். இதற்கு வேப்பிலையை மைபோல அரைத்து மேல் பூச்சாக தடவலாம். இதனால் அரிப்பும், எரிச்சலும் நீங்கும்.