ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

சித்த மருத்துவத்தில் கூறப்படும் கீரையின் பயன்கள்

சித்த மருத்துவத்தில் கூறப்படும் கீரையின் பயன்கள்

தினம் ஒரு கீரை உணவில் சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியம். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன.

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். ரத்தசோகை பிரச்னைக்கும் சிறந்த தீர்வு இந்தக் கீரைதான்.
 
அரைக்கீரை:
 
இதை சாப்பிட்டுவர பித்தம் தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும். அதிக அளவில் சிறுநீர் இறங்குவதை, கட்டுப்படுத்தி இயற்கை அளவுடன் இறங்கச் செய்யும். இரத்த பிரமேகம் என்னும் வியாதியைக் குணப்படுத்தும்.


 
 
முளைக்கீரை:
 
முளைக்கீரையை உண்ணுவதால் சொறி, சிரங்கு, நரம்பு தளர்ச்சி குணமடையும். எலும்பு வளர்ச்சியடையும், மாலைக்கண் பார்வை குறைவு நீங்கும். அஜீரணக்கோளாறு,வயிற்றுப்புண் சரியாகும். வாரத்திற்கு இருமுறையாவது 
 
முளைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல், நீரடைப்பு குணமாகும். மூக்கு, தொண்டை, வாய், பல் தொடர்புடைய நோயுடையவர்கள் தினசரி சாதத்துடன் முளைக்கீரையை சாப்பிட்டு வந்தால் அவை குணமடையும், உடலுக்கும் நல்லது.
 
சிறுகீரை: 
 
சிறுகீரையைப் பற்றி தெரியாதவர் யாருமில்லை. சிறுகீரை செம்புச்சத்தும், உஷ்ணவீர்யமும் உடையது. குடல், இருதயம், மூளை, ரத்தம் இவைகளுக்கு நல்ல வலிமையை தரும். சிறுகீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் இருதய வியாதிகள் போகும். விஷ மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுகீரையை வெறும் மிளகுடன் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் பாஷானத்தின் வீறு தணிந்து அதனால் வந்த வியாதியும் குணமடையும்.
 
பருப்புக்கீரை: 
 
இதன் இலையை நன்றாக சிதைத்து அக்கியின் மீது பற்று போட்டுவர அக்கி குணமாகும். இலையை அரைத்து நெற்றியின் மீது பற்றிட, சூட்டினால் உண்டாகும் தலைவலி தீரும். இலையை அரைத்து தீப்புண், சுடுதண்ணீர் பட்ட புண்களுக்கு பூசலாம்.
 
பசலைக் கீரை:
 
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது. நீர்ச்சத்து நிறைந்த கீரை. சிறுநீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும் வல்லமை பெற்றது. சத்துக்கள்: வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளெக்ஸ், புரதம், இரும்பு, கால்சியம் போன்றவை உள்ளன.


 
 
பலன்கள்: பைல்ஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு பசலை மிகவும் நல்லது. ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்களை, எந்தவித சிகிச்சைகளும் இல்லாமல், இந்தக் கீரையின் மூலமே குணப்படுத்திவிட முடியும்.  நீர்க்கடுப்பு, நீரடைப்பு குணமாகும். சருமப் பிரச்னைகள் தீரும். நோய்த் தொற்றைப் போக்கும்.  வாய்ப்புண்களை ஆற்றும்.