வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

பற்களை இழக்காமல் இருக்க சில வழிமுறைகள்

பற்களை இழக்காமல் இருக்க சில வழிமுறைகள்

இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களைச் சுற்றி ஒரு வித அமிலத்தைச் சுரக்கின்றன.


 


அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன. இதனால் எதை சாப்பிட்டாலும் பல் கூச்சம் ஏற்படுகிறது.
 
சுத்தமான நீரால், வாயை நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சிறு சிறு உணவுத்துகள்களை எளிதில் அகற்றி விடும். இதனால் வாய்துர்நாற்றம் ஏற்பாடாமல் இருக்கும்.
 
பாக்டீரியாக்களின் வெதுவெதுப்பான படுக்கையாக நாக்கு உள்ளது. அதனால், நாக்கின் மேலும், கீழும் நன்றாக சுத்தம் செய்வது அவசியம். தற்போது நாக்கைச் சுத்தம் செய்யும் வகையில் சொரசொரப்பான பிரஷ்களும் உள்ளன. 
 
ஆண்டுக்கு இருமுறையாவது பல் மருத்துவரிடம் சென்று பற்களை பரிசோதித்துக் கொள்ளுவதோடு, பற்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் பற்களுக்கும், உடலுக்கும் உடனடியான தீர்வு கிடைக்கும்.
 
பற்களை பாதுகாக்க சில வழிமுறைகள் :
 
1. அடிக்கடி டீ, காபி, குடிப்பதை குறைத்துக்கொள்வது நல்லது.
 
2. அளவுக்கதிகமான சூட்டையோ, குளிர்ச்சியையோ பற்களால் தாங்கிக் கொள்ளமுடியாது .
 
3. குளிர்ச்சியான உணவை உண்டவுடன், மிகவும் சூடாக எதையும் உட்கொள்ளக் கூடாது. 
 
4. இனிப்பை குறைத்துக்கொள்வது நல்லது. 
 
5. மிகவும் முக்கியமாக என்ன சாப்பிட்டாலும் வாயை தண்ணீர் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் உணவு துணுக்குகள் வாயில் தாக்குவது தவிர்க்கப்பட்டு பற்கள் பாதுகாக்கப்படும்.