கருவுற்றிருக்கும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்


Sasikala| Last Updated: செவ்வாய், 1 டிசம்பர் 2015 (17:01 IST)
கருவுற்றிருக்கும் பெண்கள் அதிக எடை உள்ள பொருட்களை தூக்குவது ஆபத்தானது.

 


1. கருவுற்றிருக்கும் பெண்கள் அதிக எடை உள்ள பொருட்களை தூக்குவது ஆபத்தானது.  அதிக எடை உள்ள பொருட்களை தூக்குவதால் கருச்சிதைவு மற்றும் கர்ப்பப்பை கீழிறங்கும் அபாயம் உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு கவனத்துடன் இருத்தல் அவசியம்.
 
2. கர்ப்பிணி பெண்கள் நெல்லிக்காய், முருங்கைகாய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்து வந்தால் கைகால் வீக்கம் வராமல் பார்த்து கொள்ள முடியும். இதனுடன் கருவுற்ற  தாய்மார்கள் சாப்பிட சிறந்த பழம் மாம்பழம். இதனால் பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் காணப்படும்.
 
3. ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதம் சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும். மேலும் கருப்பை குறைபாடுகளை தவிர்க்க பருத்தி இலைசாறை தேனுடன் கலந்து சாப்பிடல் பெண்களின் கருப்பை குறைப்பாடுகள் நீங்கும்.
 
4.கருவுற்ற பெண்களுக்கு முதல் திங்களில் அடிவயிற்றில் சிறுகச்சிறுக வலி இருந்தால் அவர்களுக்கு தாமரைப்பூ, சந்தனம், விலாமிச்சை வேர் சம அளவு எடுத்து கல் மண் நீக்கி நீர்விட்டரைத்து பசும்பாலில் தினம் ஒருவேளை மூன்று நாள் கொடுக்க நீங்கும்.
 
5. கருவுற்றிருக்கும் பெண்கள் எள் உருண்டை, அன்னாசிப்பழம், பப்பாளி பழம், கருஞ்சீரகம், வெல்லம் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக வெப்பம் தரும் பொருட்களை உண்பதால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவ்வாறு கூறப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனையின்படி கேட்டு நடப்பது அவசியம்.
 
6. ஆறாவது திங்களில் கருப்பைச் சுற்றிலும் சுழன்று சுழன்று வலித்தால், சிறுநீரும் சரியாக கழியாதிருந்தால், திப்பிலி முந்திரிப்பழம், நெய்தற் கிழங்கும் ஓரளவு எடுத்து பசும் பாலில் அரைத்துக் கொடுக்க வேண்டும்.அவ்வாறு செய்யும்போது சிறுநீர் ஒழுங்காக வெளியேறும்.
 
7. கருவுற்றிருக்கும் காலத்தில் வாந்தி ஏற்படுவதுண்டு, அவற்ற்றை தடுக்க, லவங்க பொடியை நீரில் கலந்து அரைமணி நேரம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தி மட்டுபடும். இதனால் உணவு உண்பதற்க்கு ஏதுவாகும்.
 
8. கர்ப்பிணி பெண்கள் தினசரி இரண்டு நெல்லிக்காய் சாப்பிட வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு டானிக்காக பயன்படுகிறது. மேலும் தினமும் பேரீச்சம் ப்ழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நன்கு இருக்கும். குழந்தை பிறப்பதற்கு முன்னும் பிறந்த பின்னும் இதனை கடைப்பிடிக்கலாம்.
 
9. ஆரம்ப கர்ப்ப சிதைவை தடுக்க அத்திபழம், தேன் சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொண்டால் கர்ப்பசிதைவை தடுக்கலாம். பத்தாம் மாதம் ஏற்படும் பண்களுக்கு பேறுக்கால வலி தீர முருங்கை இலை ஒரு கைப்பிடி, பத்து கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் பேறு காலவலி குறையும்.
 
10. கருவுற்றிருக்கும் பெண்கள் அதிக இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். தினமும் சிறிதளவு நடைப்பயிற்சி, நல்ல இசை, ஊட்டசத்துள்ள உணவு வகைகள் முதலியவற்றை எடுத்து கொள்ளுதல் அவசியம்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :