1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2015 (11:59 IST)

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணம்

சித்த மருத்துவத்தில் சோற்றுக் கற்றாழைக்கு தனி மரியாதை உண்டு. எளிதாக கிடைக்க கூடிய இந்த சோற்றுக்கற்றாழை பல்வேறு மருத்துவக்குணங்களை கொண்டுள்ளது.

இந்த சோற்றுக் கற்றாழை கண் திருஷ்டி உள்ளிட்ட பல்வேறு நம்பிக்கைகளின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படும். மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி ஒட்டாமல் இருப்பதற்க்காகவும் இந்த சோற்றுக்கற்றாழை கட்டி தொங்கவிடப்படும்.


 


* கற்றாழையின் பிசின் போன்ற சோற்றை தலையில் தேய்த்து  30 நிமிடம் ஊற வைத்துக் குளித்தால் தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு முதலியவை குணமாகும்.

* சோற்றுக் கற்றாழையை இரண்டாகப் பிளந்து உள்ளே கொஞ்சம் வெந்தயத்தை வைத்துவிட்டு மூடி விடவும். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து அதை தேய்த்து குளித்து வந்தால் வெள்ளை முடிகள் கருமையாகும்.

* காய்ந்த கற்றாழையை நெருப்பில் கருக்கி அதை தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வந்தால் விரைவில் புண் குணமடையும்.

* கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து அதை இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை நெருப்பில் வாட்டி உடல் தாங்கும் வெப்பத்தில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

* குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனளிக்கும்.

* மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக் கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.

* அழகு சாதனப் பொருள்களில் சோற்றுக் கற்றாழை சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.