செவ்வாய், 19 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala
Last Updated : சனி, 28 நவம்பர் 2015 (17:20 IST)

உங்கள் உதட்டின் கருமையை சிவப்பாக மாற்றிட

உங்கள் உதடுகள் அழகாகவும், சிவப்பாகவும் பராமரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்.


 
 
1. பீட்ருட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.
 
2. உதடு காய்ந்திருக்கிறதா என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக் கூடாது. உதட்டில் இருக்கும் கொஞ்சம் ஈரப்பதமும் போய்விடும். எச்சிலில் இருக்கும் பாக்டீரியாவால் உதட்டில் புண்கள் ஏற்படலாம்.
 
3. கொத்தமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் படுக்கைகுச் செல்லும் முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.
 
4. கொழுப்புச் சத்துக் குறைய குறைய உதடுகள் சுருங்கி வயதானத் தன்மையை அடைகின்றன. அதற்கு வெளிப்புறத்திலிர    ந்து ஊட்டம் தரலாம். உதடுகளுக்கு வாசிலின் தடவுவது நல்லது.
 
5. ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
 
6. தெங்காய் எண்னெயில் அரை டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து பளபளப்பாக காட்சியளிக்கும்.
 
7. கருமையான உதடு சிவப்பாக: பாலேடு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். நெல்லிக்காய் சாறு 5 சொட்டுகள் கலந்து, தினமும் உதடுகளில் பூசி வந்தால், உதட்டின் கருமை மறையும்.
 
8. தினசரி உதடுகளின்மேல் நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பாகும்.
 
9. உதட்டில் அரை ஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாறு கலந்து உதட்டில் தடவவும். இப்படிச் செய்தால் உதடு சிவப்பாகும்.