1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2015 (15:32 IST)

மஞ்சள் காமாலையை விரட்டும் உலர் திராட்சை

உலர் திராட்சையில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.


 

 
1. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும்.
 
2. சாதாரண திராட்சைப் பழத்தை விட உலர் திராட்சையில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளன. சுக்ரோஸ், பிரக்டோஸ், அமினோ அமிலங்கள், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் உள்ளன.
 
3. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இருவேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும்.
 
4.எலும்புகள் வலுப்பெறுவதற்கு உலர் திராட்சை உதவும். ஏனெனில் இதில் எலும்புகளின் வலிமை, ஆரொக்கியத்துக்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளன.
 
5. இதேபோன்று மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்கள், ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் அப்பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
 
6. எடை குறைவாக இருப்பவர்களும், உடம்பில் சூடு அதிகம் உள்ளவர்களும் உலர் திராட்சையை சாப்பிடலாம்.
 
7. குழந்தைகளுக்கு உலர் திராட்சையை அப்படியே கொடுக்கக் கூடாது.  அதை நன்றாக அலசிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு, பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவிய பிந்தான், குழந்திஅகளுக்குக் கொடுக்க வேண்டும்.
 
8. கர்ப்பிணிகளுக்கு வாய் குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
 
9. மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின் காலையிலும், மாலையிலும் 25 உலர் திராட்சைப் பழங்களை சாப்பிட்டுவந்தால் மூலநோய் பாதிப்பில் இருந்து மீளலாம்.