1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

குடல், கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் உள்ள புண்ணை ஆற்றும் மணத்தக்காளிக் கீரை

குடல், கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் உள்ள புண்ணை ஆற்றும் மணத்தக்காளிக் கீரை

கீரைகளில் மணத்தக்காளி குளிர்ச்சியைத் தரவல்லது. இது ஒரு பத்தியக் கீரை என்றும் கூறுவர்.  குறிப்பிட்ட நோயால் வருந்துபவர்கள் சாப்பிட குணமாகும்.


 


இதில் புரதமும், இரும்புச் சத்தும் அடங்கியுள்ளன. எவ்வளவு, சூடாக இருந்தாலும் தணித்துவிடும் ஆற்றல் இதற்குண்டு, இக்கீரையை அப்படியே சாப்பிட சிறிது கசப்பாக இருக்கும்.
 
இந்தக் கீரையை கொஞ்சம் வாயிலிட்டு நன்றாக மென்று தின்றால் வாய்வேக்காடு இருந்தாலும் விரைவில் ஆறிவிடும்.
 
இந்தக் கீரையுடன் பருப்பு சேர்த்து சாம்பாராகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.
 
உஷ்ண தேகமுள்ளவர்கள் சாப்பிட்டால் ஆரம்பத்தில் சீதளத்தை உண்டாக்கிவிடும், சீதள தேகமுள்ளவர்கள் சாப்பிட்டால் உஷ்ணத்தைக் கிளறிவிடும். 
 
அதனால் பயம் வேண்டாம். தொல்லைகள் எதுவும் நேர்ந்துவிடாது. இக்கீரையை தாராளமாகச் சாப்பிட நன்மையானது.
 
உடலில் எந்த பாகத்திலேனும் வீக்கமோ, வலியோ இருந்தாலும் இக்கீரையைச் சாப்பிட வீக்கம் வற்றி வலி குறைந்து விடும். உடலுக்கு சக்தி மற்றும் நல்ல போஷாக்கைத் தரவல்லது. வெட்டை நோய், மூலம் போன்ற நோய்களைத் தீர்க்கவல்லது.
 
வாயில் மட்டுமன்றி குடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளில் புண் இருந்தாலும் இக்கீரையைச் சாப்பிட்டு விரைவில் ஆற்றிக்கொள்ளலாம். நீரடைப்பு நோயால் வருந்துபவர்களுக்கும் நல்ல நிவாரணம் அளிக்கவல்லது.
 
சக்தி குறைவினாலோ நோய் ஏற்பட்ட பல்வீனத்தாலோ உடல் இளைத்து வருபவர்கள் சாப்பிட்டு வர உடல் தேர்ச்சி பெறும்.