1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2015 (20:19 IST)

அதிக நேர வேலை மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது

ஒருவர் அதிகமான நேரம் வேலை பார்ப்பதற்கும் அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாய்த் தெரிவதாக புதிய ஆய்வு ஒன்று காட்டியுள்ளது.
ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைநேர மற்றும் உடல்நலத் தரவுகளை ஆராயும்போது வாரத்திற்கு ஐம்பத்து ஐந்து மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை பார்ப்பவர்களுக்கு, வாரத்துக்கு நாற்பது மணி நேரத்துக்கும் குறைவான நேரம் வேலை பார்ப்பவர்களைக் காட்டிலும் மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாகத் தெரியவருகிறது.
 
தி லான்செட் என்ற மருத்துவ சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
 
கூடுதல் நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு இருதய நோய் வரும் ஆபத்தும் அதிகரிப்பதாக அந்த ஆய்வில் தெரியவருகிறது.