1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

பெண்ணுக்கு ஏற்படும் மாதவிடாய்

பெண்ணுக்கு ஏற்படும் மாதவிடாய்

மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், கலவிமுறை இனப்பெருக்கம் தொடர்பாக, மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும்.


 


இது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள ஒரு உறுப்பான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3-7 நாட்கள் குருதி வெளியேறுவதை குறிக்கும்.
 
நமது உடலின் கழிவுகள் எப்படி வெளியேறுகிறதோ அப்படியான ஒன்றுதான் பெண்களுக்கு ஏற்படும் மாத விலக்கு. பெண்களின் கருப்பையில் உள்ள கருமுட்டையும், அதனை பாதுகாக்க வேண்டி உருவாகும் மற்ற நீர்மங்களும் சிதைந்து பிறப்பு உறுப்பின் வழியே குருதிப்போக்கு ஏற்படுவதையே மாதவிலக்கு என்கிறோம்.
 
மாதவிலக்கு எவ்வாறு நடைபெறுகிறது?
 
மாதந்தோறும் நடைபெறும் இந்த மாதவிலக்கு குறிப்பிட்ட நபரின் உடல் அமைப்பினைப் பொறுத்து மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். ஒரு நாளில் குறைந்தது ஐம்பது மில்லி லிட்டர் முதல் 80 மில்லி லிட்டர் ரத்தம் வெளியேறும்.
 
கருமுட்டையானது வளர்ச்சியடைந்து முதிர்ந்த நிலையில் கருப்பையில் வந்து சேர்கிறது. கருமுட்டையை பாதுகாக்க கருப்பை சில நீர்மக்களை உருவாக்கி கருமுட்டையை பாதுகாக்கிறது. கருவறையின் சுவர்கல் தடித்து கருமுட்டையின் வளர்ச்சிக்குத் தேவையான குருதியை நிரப்பி வைக்கிறது.
 
இந்த காலகட்டத்தில் கருத்தரிப்பு நிகழாவிட்டால், அந்த கருமுட்டையானது சிதைந்து கருப்பை உருவாக்கிய நீர்மங்களோடு சேர்ந்து குருதியாக பிறப்பு உறுப்பின் வழியாக வெளியேறுகிறது. இதனையே மாத விலக்கு என்கிறோம்.