1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 மார்ச் 2018 (20:41 IST)

தினமும் காபி குடிப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

தினமும் காலை ஒரு கப் காபி குடிப்பதால் ஏராளமான நன்மைகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
ஆய்வின்படி தினமும் காபி அருந்துவதால் லிவர் சிரோசிஸ் எனப்படும் கல்லீரல், நீரிழிவு அபாயம் குறையும். தினமும் சுமார் 6 கப் காபி அருந்துபவர்களுக்கு ‘டைப் 2’ நீரிழிவு நோய் அபாயம் குறையும். தினமும் 3 முதல் 4 கோப்பை காபி அருந்துபவர்களுக்கு இதயநோய்கள் ஏற்படும் வாய்ப்பு 19% குறைகிறது.
 
காபி அருந்துவது பெருங்குடல், தொண்டை, கல்லீரல், கருப்பை மற்றும் விதைப்பை (புரோஸ்டேட்) புற்றுநோய் அபாயங்களைக் குறைக்கிறது. அன்றாடம் காபி அருந்துவோர் அல்சைமர், டிமென்சியா போன்ற ஞாபக மறதி வியாதிகளில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு உள்ளது. காபி அருந்தினாலே மன அழுத்த அபாயம் குறையும். 
 
இனி தினமும் எல்லோரும் குறைந்தபட்சம் ஒரு கப் காபி குடிக்க பழக வேண்டும்.