Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பழங்களில் இயற்கையாகவே உள்ள சர்க்கரை அளவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...

Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2017 (21:14 IST)

Widgets Magazine

பழங்களில் பல்வேறு பலன்கள் இருக்கிறது. இனிப்புச்சுவை மிகுந்த பழங்களை சாப்பிடுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிக்கல் ஏற்படும். எனவே, பழங்களில் எவ்வளவு சர்க்கரையளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.


 
 
மாம்பழம்: மாம்பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை சத்து அடங்கியிருக்கிறது. ஒரு மாம்பழத்தில் 45 கிராம் சர்க்கரை கிடைக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் மாம்பழங்களை தவிர்ப்பது நல்லது.
 
திராட்சை: ஒரு கப் திராட்சை பழத்திலிருந்து 23 கிராம் சர்க்கரை கிடைக்கும். ஆனால். திராட்சை ஜீரண சக்தியை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதனை அளவாய் சாப்பிடலாம். 
 
அத்திபழம்: சற்றே பெரிய வடிவ இரண்டு அத்திப்பழத்தில் 16 கிராம் சர்க்கரை இருக்கிறது. குறைந்த அளவு சர்க்கரை இருக்கிறது என அதிகமாக எடுக்கக்கூடாது. 
 
வாழைப்பழம்: சிறிய அளவிலான வாழைப்பழத்தில் மட்டும் 14 கிராம் சர்க்கரை வரை இருக்கும். என்வே, சர்க்கரை நோயாளிகள் வாழைபழத்தை விட்டு விலகி இருப்பது நல்லது.
 
அவகோடா: இதில் அரைகிராம் அளவு தான் சர்க்கரை இருக்கிறது. சர்க்கரை குறைவாக இருந்தாலும் கலோரிகள் அதிகமாக இருக்கும். 
 
கொய்யாப்பழம்: சிறிய அளவிலான கொய்யாப்பழத்தில் 5 கிராம் சர்க்கரை இருக்கும். தோல் நீக்கி சாப்பிடுவதை விட தோலுடன் சாப்பிடுவது நல்லது. 
 
பப்பாளி: அரை பப்பாளிப் பழத்தில் 6 கிராம் சர்க்கரை இருக்கும். ஒரு நேரத்தில் முழு பப்பாளி பழத்தை சாப்பிடகூடாது.  
 
ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரி பழத்தில் 5 கிராம் சர்க்கரை இருக்கிறது. 
 
செர்ரீ: ஒரு கப் செர்ரீ பழத்திலிருந்து 18 கிராம் சர்க்கரை கிடைக்கும். 
 
பேரிக்காய்: இவற்றில் 17 கிராம் சர்க்கரைச் சத்து அடங்கியிருக்கிறது. 
 
தர்பூசணி: நீர்சத்து நிறைந்த தர்பூசணியில் 17 கிராம் சர்க்கரை கிடைக்கும். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் இயற்கை மருந்து மணத்தக்காளி கீரை!!

தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தானாகவே வளர்ந்து இருக்கும் மணத்தக்காளி கீரையின் ...

news

சிறுநீரக கோளாறுக்கு அருமையான மருந்து வாழைத்தண்டு!!

சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் ...

news

சத்துகள் முழுமையாக கிடைக்கும் உணவுகள் எவையென்று தெரியுமா!!

ஒவ்வொரு சமையல் முறைக்கும் ஒவ்வொரு சுவை இருக்கிறது. சில சமையல் முறைகளால் சமைக்கப்பட்ட ...

news

ஆரோக்கியம் நிறைந்த சிறுதானியத்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம்...!

பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற ...

Widgets Magazine Widgets Magazine