Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட கேரட்!

Widgets Magazine

கேரட்டில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். உணவு நன்கு செரிமானம் ஆகும். இது பூச்சிகளால் வரும் நோய்களைத் தடுக்கிறது.

 

 
 
1. உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்குத் தேவையான சத்து கிடைக்கும்.
 
2. கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண்களுக்குப் பலம் கொடுக்கக் கூடியது. விழித்திரைக்குப் பலம் சேர்க்கும். கண்பார்வை நன்றாக இருக்கும். தோலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.
 
3. கோடக்காலத்தில் வெளியில் சென்று வரும்போது புறஊதாக் கதிர்கள் தோலைப் பாதிக்கிறது. தோல் கருப்பாவதைத் தடுக்கிறது. தோலில் சிராப்புக் காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை பசையாக்கித் தடவினால் சிவப்புத் தன்மை போகும். வேர்க்குரு மறையும்.
 
4. தோலில் ஏற்படும் பிரச்சனைக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. புண்களை ஆற்றும் வல்லமை உடையது. கேரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க்கிறது. வீக்கம், வலியை கரைக்கக் கூடியது. கேரட்டைப் பயன்படுத்தி கோடைகாலத்துக்கான ஜூஸ் தயாரிக்கலாம். 
 
5. ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய்ப் பொடி, பனங்கற்கண்டு சேர்த்துக் காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது.
 
6. கோடக்காலத்தில் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை சமப்படுத்தும், நாக்கு, தொண்டை, குடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கேரட்டைப் பயன்படுத்தி அல்சருக்கான மருந்துத் தயாரிக்கலாம்.
 
7. கேரட் துருவலுடன் உப்பு, அரை ஸ்பூன் தனியா பொடி, மல்லி, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர வயிற்றுப்புண் சரியாகும். வயிர்று வலி குணமாகும். நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்படும். 
 
எலும்புகள், பற்கள், தோல், கண் ஆகியவற்றுக்கு நன்மை தரும். கேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் போகும்.  பற்களுக்கு பலம் கிடைக்கிறது. ஈறுகள் கெடாமல் இருக்கும். வாய்ப்புண்கள் குணமாகும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

உடல் எடையைக் கூட்டும் உலர்திராட்சை பற்றி தெரிந்துகொள்வோம்...

உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் ஆகியவை ...

news

தோல் நோய்களுக்கு இயற்கை மருத்துவத்தில் தீர்வுகள்!!

பலரையும் தாக்கும் நோய்களில் சரும நோயும் ஒன்று. பலரின் ஏளனப் பார்வைக்கு நம்மை உள்ளாக்கி மன ...

news

மூளையை பாதிக்கும் வாகனப்புகை: புதிய ஆய்வு எச்சரிக்கை

நகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள் செல்வதாகவும் மூளையில் ஏற்படும் ...

news

தொண்டை தொற்றுகள் ஏன் வருகின்றன? அதற்கு என்ன செய்யலாம்...

தொண்டை வலி, கரகரப்பு, தொண்டை வீக்கம் போன்ற அனைத்தையுமே தொண்டைப் புண் என்று பொதுவாகக் ...

Widgets Magazine Widgets Magazine