1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala
Last Modified: புதன், 25 நவம்பர் 2015 (12:59 IST)

எலும்பின் அடர்த்தியை கூட்டும் பீட்ரூட்

நாம் உண்ணும் காயகறிகள் சுகாதாரமாகவும், சத்துள்ளதாகவும் இருத்தல் அவசியம். பீட்ரூட் போன்ற தாவர உணவுகளில் அதிக அளவில் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.


 


அவற்றை காண்போம்.....
  • செரிமானத்தை முறைப்படுத்தி ஒழுங்காக்குகிறது. அதில் அதிக நார் சத்து காரணமாக மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
  • பீட்ரூட் சாறு அருந்துவதால் இரத்த அழுத்தை குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
  • இவை மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
  • இரத்த ஓட்டத்தை அதிகரித்து இரத்த சோகை வராமல் தடுக்கிறது.
  • இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் செய்கிறது.
  • மூப்படைதலைத் தாமதப்படுத்துகிறது.
  • இதய நோய்கள் வாராமல் தடுக்கிறது.
  • செரிமானப் பாதையை ஆரோக்கியப்படுத்துகிறது.
  • எலும்பு அடர்த்தி குறைதல் நோயைத் தடுத்து எலும்பின் அடர்த்தியை கூட்டுகிறது.
  • பீட்ரூட் சாறு குழந்தைகளுக்கு கொடுப்பதால் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
  • சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது.
  • பீட்ரூட்டில் பீட்டாசியானின் இதில் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.