வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 10 மார்ச் 2017 (15:50 IST)

பெண்களுக்கும் பரவுகிறது வழுக்கை தலை. தடுக்கும் வழிகள் எவை எவை?

40 வயதை கடந்த ஆண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று வழுக்கை விழுதல். கருகருவென்று முடி வைத்திருந்தவர்கள் கூட திடீரென ஒருசில மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ முடியை இழந்து வழுக்கை தலையுடன் காணப்படுகின்றனர்.


 


முன்பெல்லாம் ஆண்களுக்கு மட்டுமே இருந்த இந்த வழுக்கை பிரச்சனை தற்போது பெண்களுக்கும் பரவி வருகிறது.  வழுக்கைக்கு முக்கிய காரணம்  பரம்பரைரீதியாக வருவதுதான். வழுக்கை வந்துவிட்டால் மீண்டும் முடி முளைக்கச் சாத்தியமே இல்லை. எனவே கூடியவரையில் வழுக்கை வராமல் பார்த்து கொள்வதே சால சிறந்தது



வழுக்கையை வரும் முன் காப்பது எப்படி என்று இப்போது பார்ப்போமா!

1. வழுக்கை வரும் அறிகுறி தோன்றினால் உடனடியாக தலைமுடியில் வேர்க்கால்கள் எப்படி இருக்கின்றன என்றும் அதற்கு உயிர் இருக்கிறதா என்றும் ஸ்கேன் செய்து தெரிந்து கொண்டு அதர்குரிய சிகிச்சை எடுத்து கொண்டால் வழுக்கை விழாமல் தடுக்கலாம்.

2. தலைக்குளியல் அடிக்கடி அவசியம். முடிந்தால் தினமும் தலைக்கு குளியுங்கள். வழுக்கையை தவிர்க்கலாம்

3. பெண்கள் தங்கள் தலைமுடியை இழுத்து பிடித்து இறுக்கமாக பின்னால் தளர்வாக பின்னினால் தலைமுடியை பாதுகாக்கலாம்.

4. எலுமிச்சை விதைகள் 50, மிளகு 50, கைப்பிடி சின்ன வெங்காயம் ஆகியவற்றை நன்றாக அரைத்து, வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்து குளித்தால் முடியின் வேர்க்கால்கள் திறந்து, மறுபடி வளரும் வாய்ப்பு உள்ளது.

5. குமுட்டிக்காய் என்ற காயை வாங்கி அதை வெட்டினால் உள்ளுக்குள் ஈரப்பதம் இருக்கும். வழுக்கை விழும் பகுதியின் மேல் அதைத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து ஊறியதும் கழுவினால், உதிர்ந்த இடத்தில் முடி வளரும்.

6. தற்போது ஹேர் டிரான்ஸ்ப்ளான்டேஷன் என்றா சிகிச்சை மூலம் வழுக்கைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.