1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 29 மார்ச் 2018 (19:06 IST)

சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத 5 விஷயங்கள்!

உணவு அருந்திய பிறகு எந்த வேலையும் செய்யக்கூடாது என்று வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்வது வழக்கம்.

 
பொதுவாக வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளை உணவு உண்ட பின் சிறிது நேரத்திற்கு எந்த வேலையும் செய்யக்கூடாது என்று அறிவுரை சொல்வார்கள். ஏன் இதை நம் வீட்டிலே நமக்கு சொல்வது உண்டு. ஆனால் இதை சிலர் கடைப்பிடிக்க மாட்டார்கள்.
 
உணவு செரிமானமாகும் வரை எந்த வேலையும் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். அதில் குறிப்பாக இந்த 5 செயல்களை செய்யக்கூடாது. 
 
அவை;
 
படுக்கைக்கு செல்வது, டீ குடிப்பது, பழம் சாப்பிடுவது, நடை மற்றும் குளியல்.
 
சாப்பிட பின் சில மணி நேரம் கழித்து படுக்கைக்கு செல்வது உடலிற்கு நல்லது.
 
சாப்பிட்ட பின் டீ குடித்தால் டீ-யில் உள்ள டானின் உடம்பு உள்ள இரும்பு சத்தை உறிஞ்ச வாய்ப்புள்ளது.
 
சாப்பிட்ட பின் பழங்கள் எடுத்துக் கொள்வது உடல் பருமனை அதிகரிக்க உதவுகிறது.
 
சாப்பிட்ட பின் உடனே நடந்தால் எதிர்வினை அமிலம் சுரக்கும் என்றும் இதனால் அஜீரணம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
 
சாப்பிட்ட உடன் குளித்தால் உடலை மிதமான வெப்பநிலையில் வைத்துக்கொள்ள ரத்தம் ஓட்டம் இருக்கும் செரிமானத்திற்கு குறைவான அளவே ரத்த ஓட்டம் இருக்கும்.