வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam

தொற்று நோய்கள் பரவ என்ன காரணம்?

உலகில் வாழும் மனித இனங்களை ஒருபக்கம் அணு ஆயுதங்கள் பயமுறித்து வந்தாலும் இன்னொரு பக்கம் தொற்று நோய்கள் பரவி மனித இனத்தை அழிக்க முயற்சிக்கின்றது. இந்த தொற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றால் மனித இனத்திற்கு மிகப்பெரிய ஆபத்து நேரிடலாம்



 


சாதாரண சளி காய்ச்சல் முதல்  காலரா, பிளேக், பெரியம்மை என்று ஆரம்பித்து பன்றிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல், டெங்கு என ஏராளமான தொற்றுநோய்கள்  எப்படிப் பரவுகின்றன என்பதை அறிந்தால் மட்டுமே அதன் பாதிப்பில் இருந்து தப்ப முடியும்.

மனிதர்கள் அல்லது விலங்குகள் என ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதாகத் தொற்றிப் பரவும் நோய்களைத்தான் ‘தொற்றுநோய்கள்’ என்று கூறுகிறோம். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளே தொற்றுநோய்கள் பெருக முக்கிய காரணம். காற்று, நீர், ரத்தம் ஆகியவைகள் மூலம் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதாக பரவும் இயல்புடையவை.

காற்றின் மூலம் என்னென்ன தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது?

ஃப்ளூ, தட்டம்மை, சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி, காசநோய், பன்றிக்காய்ச்சல், ரூபெல்லா, சார்ஸ் ஆகிய நோய்கள் காற்றின் மூலம் மிக வேகமாக பரவும். இந்த நோய் உள்ளவர்கள் இருமும்போதோ அல்லது தும்மும்போதோ அருகில் யாராவது இருந்தால் அவர்களை இந்த நோய் பற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

நீரின் மூலம் என்னென்ன தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது?

மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சல், பிளேக், வெறிநாய்க்கடி (ரேபிஸ்).

கொசுக்கள், ஈ, எலி, நாய் ஆகியவை மனிதர்கள் பயன்படுத்தும் தண்ணீரை பயன்படுத்தினால் மேற்கண்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.,

ரத்தத்தின் மூலம் என்னென்ன தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது?

ஹெபடைட்டிஸ் பி, டெட்டனஸ், எஸ்.டி.டி எனும் பால்வினை நோய்கள், எய்ட்ஸ் ஆகிய நோய்கள் தாம்பத்தியம் மற்றும் ரத்தம் மூலமாக பரவும் நோய்கள் ஆகும்.

மேற்கண்ட நோய் பாதிப்பு அடைந்தவர்களுக்கு செலுத்திய ஊசியை இன்னொருவருக்கு பயன்படுத்தினாலோ, பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொண்டாலோ இந்த நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது.

எனவே கூடிய வரையில் தொற்று நோய் பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஒருவேளை பரவிவிட்டால் உடனே உங்களுக்கு தெரிந்த சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்