வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Last Updated : புதன், 29 அக்டோபர் 2014 (22:31 IST)

ஆஸ்துமா - பஃப் அடிக்கும்போது என்ன நடக்கிறது?

அக்குபங்சர் மருத்துவர் அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன், சென்னை
 
ஒரு சிறிய மெல்லிய குழாயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் வழியாக காற்றை ஊதுங்கள். இப்போது காற்று சீரான வேகத்துடன் செல்லும். அதே குழாயை ஒரு இடத்தில் அழுத்திப் பிடித்துக்கொண்டு காற்றை ஊதிப் பாருங்கள். காற்று போகும் பாதையில் தடை ஏற்படும் போது, காற்று வேகத்துடனும் சத்தமாகவும் வெளியேறும். குழாயில் காற்று தடையில்லாமல் போக வேண்டுமானால், அதில் ஏற்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்.
 
அதேபோல் நுரையீரலின் நுண்ணிய குழாய்களில் ஏற்பட்டுள்ள தடை (ஆஸ்துமா) எதனால் ஏற்பட்டது? நாட்பட்டுச் சேர்ந்த கழிவுகளால். முதலில் இவற்றை வெளியேற்ற வேண்டும். ஒவ்வொரு முறை உடலானது இவற்றை வெளியேற்ற முயலும் போது (சளி பிடிக்கும்போது) மருந்துகளினால் நீங்கள் அவற்றை நிறுத்தும் போது, அந்தக் கழிவுகள் காய்ந்து நரையீரலிலேயே படிந்து விடுகின்றன. 
 
சளி பிடிக்கும் ஒவ்வொரு முறையும் இவ்வாறு நீங்கள் செய்யும் போதும் இந்தக் காய்ந்த சளிக் கழிவுகள் நுரையீரலின் நுண்ணிய குழாய்களில் படிந்து, அதன் பாதையில் தடையை ஏற்படுத்துகின்றன. காற்று போகும் பாதையில் தடை ஏற்படும் போது, மூச்சு விடுவதில் சிரமம், இரைப்பு, சத்தம் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை மூச்சு விடும்போதும் சொல்ல முடியாத வேதனையை நீங்கள் அனுபவிப்பது இதனால் தான்.
 
ஆஸ்துமா நோயாளிகள் மூச்சிரைக்கும் போது, பஃப் அடித்தால் என்ன நடக்கிறது?

 
பஃப் அடித்ததும் மூச்சிரைப்பு கட்டுப்படுகிறது. அது அப்போதைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். நீங்கள் ஒவ்வொரு முறை பஃப் அடிக்கும் போதும் கழிவுகள் சேர்ந்து வீங்கிப் போன, காற்று புக முடியாத நுரையீரலின் நுண்ணிய குழாயை விரித்துப் பிடிக்கும் வேலையைச் செய்கின்றன, இந்த பஃப்-இல் இருக்கும் மருந்துகள்.
 
ஒவ்வொரு நாளும் இந்த நுண்ணிய குழாய்களை விரித்துப் பிடிப்பது நிரந்தரத் தீர்வா! அல்லது அந்த நுண்ணிய குழாய்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, ஆஸ்துமாவை முழுவதும் குணமாக்கி, ஆரோக்கியத்தைத் தருவது நிரந்தரமான தீர்வா என்பதை நீங்களே முடிவு வெய்யுங்கள்.... 
 
கழிவுகளை நீக்காமல் எந்த லோகத்திலிருந்து மருந்து கொண்டுவந்து சாப்பிட்டாலும் தேர் ஈஸ் நோ யூஸ். நித்ய கண்டம் பூரண ஆயுள்தான்....
 
இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
 
நாட்பட்டு சேர்ந்து வெளியேற முடியாத கழிவுகளை வெளியேற்றுவதும், தாகம் எடுத்தால் தண்ணீர், பசி எடுத்தால்தான் உணவு என்ற பழக்கம்தான் உங்களை ஆரோக்கியமாக வைக்கும்.
 
நோய்கள் உருவாக அடிப்படைக் காரணம் கழிவுகளின் தேக்கமும் அதனால் உடலின் சக்தி மாற்றத்தில் ஏற்படும் குறைபாடுமே ஆகும். உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளை திறக்க இது ஒன்றே போதுமே!

படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா