வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 6 மார்ச் 2017 (00:59 IST)

கண்ணாடி வாங்க போகிறீர்களா? அதற்கு முன்பு இதை படியுங்கள்

பணக்காரர்கள் மட்டுமே ஒரு காலத்தில் அணிந்து வந்த சன்கிளாஸ் தற்போது அனைவரும் அணிந்து வருகின்றனர். குறிப்பாக தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டதால் கண்ணுக்கு குளிர்ச்சியாக அனைவரும் தற்போது சன் கிளாஸ் அணிய விரும்புகின்றனர்.


 



இந்நிலையில் நாம் அணியும் சன் கிளாஸே நமக்கு எதிரியாக மாறிவிடக்கூடாது. தரமற்ற கண்ணாடிகளில் பூசப் பட்டிருக்கும் கோட்டிங் மற்றும் வண்ணப்பூச்சுக்கள் நமது கண்களை பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த கெமிக்கல்கள் நமது வியர்வை அல்லது கண்களில் பட்டால் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் கண்ணாடியின் பிரேம் தரமற்ற பொருளில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால், மூக்கின் மேல் அழுத்தத்தை ஏற்படுத்தி அலர்ஜியை ஏற்படுத்தும்

இந்நிலையில் கண்ணாடியை தேர்வு செய்யும் முன் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா?

போட் டோக்ரோமிக் (Photochromic), போலரைஸ்டு (Polarized), ARC என்று கூறப்படும் ஆன்டி ரிஃப்ளெக்டிவ் கோட்டிங் (Anti reflective coating) கிளாஸ்கள் அணிந்தால் கண்களுக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது,.

கண்ணாடியை செலக்ட் செய்வதற்கு முன்னர் அந்த கண்ணாடி உங்களுடைய கண்களுக்கு சரியாக பொருந்துமா, அதில் ஜீரோ பவர் உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும். மேலும் அதன் பிரேம் தரமான பொருட்களால் செய்யப்பட்டதா என்பனவற்றை உறுதிசெய்து விட்டே வாங்க வேண்டும்.

பொதுவாக குழந்தைகளுக்கு எந்த வகைக் கண்ணாடியும் அணிவிக்காமல் இருப்பஅது நல்லது. குழந்தைகளின் கண்கள் சிறியதாக இருப்பதால் அந்த பருவத்தில் கண்களை நன்றாக விழித்து அனைத்துப் பொருள்களையும் பார்க்க வேண்டியது அவசியம். அதற்கு பதிலாக குழந்தைகளுக்கு கண்ணாடி அணிவித்தால், கண்களை விழித்துப் பார்ப்பதைக் குறைத்துக் கொள்வார்கள். அதனால், பார்வைத் திறனில் நாளடைவில் பாதிப்பு ஏற்படலாம்.

ஸ்டைல் கிளாஸ், சன் கிளாஸ், பவர் கிளாஸ் எந்த வகை கண்ணாடியாக இருந்தாலும், முதலில் கண் டாக்டரிடம் சென்று கண் பரிசோதனை செய்து, அதற்கு பின்னர் கண்ணுக்குப் பொருத்தமான கண்ணாடியை வாங்குவதுதான் முறை

மற்றவர் அணியும் கண்ணாடியை எந்த காரணத்தை கொண்டும் பயன்படுத்த வேண்டாம்.