Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்த ஆண்டின் மிகப்பெரிய மோசடி: ரூ.251 ஸ்மார்ட்போன் என்னாச்சு?

Last Modified: புதன், 21 டிசம்பர் 2016 (20:45 IST)

Widgets Magazine

மேக் இன் இந்தியா இந்தியா திட்டத்தின் கீழ் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் ரூ.251க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்தது. அதன்படி ஆன்லைன் புக்கிங் நடைப்பெற்றது. ஆனால் மொபைல் போன் மட்டுமே வெளிவரவில்லை. இந்த 251 ரூபாய் மொபைல் போனுக்கு என்னாச்சு என்று யாருக்கும் தெரியவில்லை.மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம், ஃபிரீடம் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.251க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்து, அதற்காக புக்கிங் வசதி கொண்ட சேவையையும் வழங்கியது அந்நிறுவனம்.

பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவனான முரளி மனோகர் ஜோஷி  தலைமையில் நடந்த விழாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஃபிரீடம் ஸ்மார்ட்போன் புக்கிங் செய்வது குறித்து அந்நிறுவனம், மொபைலுக்கான 251 ரூபாயுடன் டெலிவரி சார்ஜாக சுமார் 40 ரூபாயும் சேர்த்து 291 ரூபாய் இணையத்தில் செலுத்தி விட்டால் போதும். அதாவது ஜூன் முப்பதாம் தேதி மொபைல் புக்கிங் செய்தவர்கள் அனைவரின் கையிலும் மொபைல் இருக்கும் என்று தெரிவித்தது. அதைத்தொடர்ந்து அந்நிறுவனத்தின் தலைவர் கூறியதாவது:-

இதுவரை மொத்தமாக மொத்தமாக ஏழு கோடி பேர் மொபைல் ரிஜிஸ்டர் செய்தார்கள், அதில் முப்பதாயிரம் ஆர்டர் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது . அதில் ஐந்தாயிரம் மொபைல் மட்டும் ஜூன் இறுதியில் டெலிவரி செய்யப்படும். மீதி பேருக்கு பணம் திருப்பி அனுப்பபடும், அதன் பின்னர் கேஷ் ஆன்  டெலிவரி முறையில் 65,000 மொபைல் மீண்டும் தரப்படும் என்று கூறினார்.

ஆனால் இன்றும் அந்த முப்பது ஆயிரம் நபர்களுக்கு மொபைல் போன் போய் சேர்ந்ததா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த மொபைல் போல் வெளிவந்ததா என்பது குறித்த சந்தேகம் அனைவரிடமும் உள்ளது.

மேலும் இதுவே இந்த ஆண்டின் மிகப்பெரிய மோசடியாக கருத்தபடும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதோடு இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அடிமைப்படுத்திய இங்கிலாந்தை 150 ஆண்டுகளுக்கு பின் வீழ்த்திய இந்தியா!!

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா உயர்ந்திருப்பதாக ...

news

பெங்களூர் டு கொச்சி, கோவா, ஹைதராபாத் ரூ.917 மட்டுமே: ஏர் ஏசியா!!

இந்தியாவில் பட்ஜெட் விமான சேவையை அளித்து வரும் ஏர் ஏசியா நிறுவனம் புத்தாண்டு சலுகையாக ...

news

இலவச இன்டர்நெட்: ட்ராய் பரிந்துரை!!

ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க இலவச இன்டர்நெட் சேவையை அளிக்க வேண்டும் என்று ட்ராய் ...

news

பேடிஎம் மீது அமெரிக்க நிறுவனம் வழக்கு!!

இந்தியாவைச் சேர்ந்த பெமெண்ட் நிறுவனமான பேடிஎம் மீது அமெரிக்காவைச் சேர்ந்த பேபால் நிறுவனம் ...

Widgets Magazine Widgets Magazine