வோடோபோன் சூப்பர் ஹவர்: ரூ.7-க்கு டேட்டா மற்றும் அழைப்புகள்!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (17:34 IST)
வோடோபோன் தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.7 முதலான கட்டண திட்டங்களை அறிவித்துள்ளது.

 
 
சூப்பர் ஹவர் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு இலவச வோடோபோன் டூ வோடோபோன் அழைப்புக்கள் மற்றும் வரம்பற்ற 4ஜி/ 3ஜி டேட்டா சலுகைகளை வழங்குகிறது.
 
வோடோபோன் சூப்பர் ஹவர் பேக் வரம்பற்ற இணையத்தை 1 மணிநேரம் அனுபவிக்க உதவும். மேலும், 1 மணிநேரத்திற்கு வரம்பற்ற வாய்ஸ் கால்களை அனுபவிக்க முடியும். 
 
ரூ.7-க்கு ஒரு மணி நேர வரம்பற்ற அழைப்புகளை அனுபவிக்கலாம். ரூ.21-க்கு 1 மணி நேரம் செல்லுபடியாகும் 4ஜி / 3ஜி தரவை அனுபவிக்கலாம். 
 
2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட சூப்பர் ஹவர் இந்த ஆண்டு டிசம்பர் 1 வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். மேலும் இந்த வோடோபோன் சூப்பர் ஹவர் திட்டம் மறுபதிப்புகளில் கிடைக்கிறது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :