Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வோடபோன் அதிரடி ஆஃபர்!!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (16:05 IST)
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் நிறுவனம் ரோமிங் சேவைகளில் அதிரடி ஆஃப்ரை அறிவித்துள்ளது.

 
 
வோடபோன் நிறுவனம் இனி ரோமிங்லும் வரம்பற்ற இன்கம்மிங், அவுட்கோயிங் அழைப்புகள் செய்யலாம் என்று தனது ஹை-வேல்யூ போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது.
 
இப்போது வோடபோனில், ரூ.1999-க்கு ரோமிங்கில் இருக்கும் போது வரம்பற்ற இன்கம்மிங், அவுட்கோயிங் அழைப்புகளுடன் 8 ஜிபி தரவை பயன்படுத்தலாம். 
 
ரூ.1,699-க்கு 6 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் ரோமிங்கில் இன்கம்மிங் அழைப்புகளை மட்டும் இலவசமாகப் பெறலாம். ரோமிங்கில் இருக்கும் போது அவுட்கோயிங் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 0.50 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும். 
 
போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் ரோமிங்கில் இருக்கும் போது அதிகளவில் தரவை பயன்படுத்துவதுடன் அழைப்புகளையும் செய்கிறார்கள். எனவே புதிய வோடபோன் ரெட் மூலமாக போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரோமிங், தரவு மற்றும் அழைப்புகள் என்று அனைத்தையும் ஆல் இன் ஒன் திட்டமாக அறிமுகம் செய்வதாக வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :