வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 18 மார்ச் 2016 (11:39 IST)

விடியோகான் அலைக்கற்றையை வாங்குகிறது ஏர்டெல்

விடியோகான் நிறுவனத்துக்கு சொந்தமாக 6 தொலைத்தொடர்பு வட்டங்களில் உள்ள அலைக்கற்றையை ரூ.4,428 கோடிக்கு ஏர்டெல் நிறுவனம் வாங்க உள்ளது.


 

 


இது குறித்து ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:-
 
 
பிகார், ஹரியாணா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் கிழக்கு, உத்தரபிரதேசம் மேற்கு மற்றும் குஜராத் ஆகிய தொலைத்தொடர்பு வட்டங்களில் விடியோகானுக்கு சொந்தமான 1,800 மெகாஹர்ட்ஸ் அலைக்கற்றையை வாங்க பார்தி ஏர்டெல் நிறுவனம் இறுதி உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது.
 
இந்த அலைக்கற்றை உரிமம் ரூ.4,428 கோடி மதிப்பில் வாங்க உள்ளது. இந்த அலைக்கற்றைக்கான உரிமம் 2032 ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வரையில் செல்லுபடியாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.