Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்த ஆண்டின் டாப் 6 எஸ்யூவி மாடல் கார்கள்!!

திங்கள், 26 டிசம்பர் 2016 (13:23 IST)

Widgets Magazine

எஸ்யூவி மாடல் கார் தான் இந்தியர்களின் இப்போதைய ஃபேவரிட் ரகமாக மாறியிருக்கிறது. இதனால், புதிய எஸ்யூவி மாடல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சில......


 
 
ஃபோர்டு எண்டெவர்:
 
ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் மிக கம்பீரமான தோற்றம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த எஸ்யூவி 158 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.3 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 197 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் வந்தது.
 
ஆஃப்ரோடு சவால்களுக்கு ஏற்ற தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவி ஆஸ்திரேலிய என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்தியது. ரூ.23.51 லட்சம் ஆரம்ப விலை முதல் கிடைக்கிறது.
 
ஹூண்டாய் டூஸான்:
 
ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் சான்டா ஃபீ எஸ்யூவி மாடல்களுக்கு இடையிலான விலையில் நிறுத்தப்பட்டுள்ளது புதிய ஹூண்டாய் டூஸான். 
 
இந்த எஸ்யூவி 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரண்டு மாடல்களுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
 
டொயோட்டா ஃபார்ச்சூனர்:
 
டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி 164 குதிரைசக்தி திறனை அளிக்க வல்ல 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 177 குதிரைசக்தி திறனை வழங்க வல்ல 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 
 
6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கிறது. ரூ.25.92 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
 
மாருதி பிரெஸ்ஸா:
 
இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களில் விற்பனையில் கலக்கி வரும் மாடல் மாருதி பிரெஸ்ஸா. இதுவரை 1.72 லட்சம் முன்பதிவுகளை பெற்றிருப்பதுடன், 83,000 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 
 
இந்த எஸ்யூவி டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. இந்த எஸ்யூவியில் இருக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 
 
5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. லிட்டருக்கு 24.3 கிமீ மைலேஜ் தரும். ரூ.7.19 லட்சம் ஆரம்ப விலை முதல் கிடைக்கிறது.
 
மெர்சிடிஸ் பென்ஸ்:
 
இந்த எஸ்யூவி ஜிஎல்சி 220 டீ 4MATIC ஸ்டைல், ஜிஎல்சி 220 டீ 4MATIC ஸ்போர்ட் மற்றும் ஜிஎல்சி 300 4MATIC ஸ்போர்ட் ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கிறது. 
 
மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரில் இருக்கும் 2,143 சிசி டீசல் எஞ்சின்தான் இந்த எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
 
அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0-100 கிமீ வேகத்தை 8.3 வினாடிகளில் எட்டிவிடும். ரூ.47.90 லட்சம் ஆரம்ப விலை முதல் கிடைக்கிறது.
 
ஹோண்டா பிஆர்வி: 
 
இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எஸ்யூவி மாடல்களில் காம்பேக்ட் ரகத்தில் வந்த ஹோண்டா பிஆர்வி சிறந்த அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவி 7 சீட்டர் மாடலாக வந்தது. 
 
இந்த எஸ்யூவியில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 117 பிஎச்பி பவரையும், டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 98.6 பிஎச்பி பவரையும் அளிக்க வல்லதாக இருக்கின்றன. 
 
6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரூ.9.05 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஸ்மார்ட் போன் ஸ்க்ரோலிங்கில் சார்ஜிங்!!!

பெல்சில்வேனியா தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஸ்மார்ட் போன்களில் சீக்கரம் பேட்டரி ...

news

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை வைத்துள்ளீர்களா?

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கும் போது அதில் உள்ள சில பாதகங்களை ...

news

சிறு சேமிப்பிலும் கை வைத்த மத்திய அரசு: என்னதான் திட்டம்?

வருங்கால வைப்பு நிதி திட்டங்களின் வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்து தற்போது சிறு ...

news

கருப்பு பணத்தை வெள்ளையாய் மாற்ற உதவும் டிடி!!

கருப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு அதிக மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகளைச் செல்லாது ...

Widgets Magazine Widgets Magazine