வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By அபிமுகதீசு
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2016 (13:40 IST)

மானிய விலையை கட்டுப்படுத்த மண்ணெண்ணெய் விலை உயர்வு

மானிய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு மண்ணெண்ணெய்  விலையை உயர்த்தியுள்ளது.


 

 
எண்ணெய் நிறுவனங்கள் மண்ணெண்ணெய் விலையை மாதந்தோறும் 25 பைசா வீதம் உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 
 
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் மானிய சுமையைக் குறைக்கும் விதமாக மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இதன்படி மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 25 பைசா வீதம் 10 மாதங்களுக்கு உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
 
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மண்ணெண்ணெய் விலை உயர்வை, மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
 
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:-
 
ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும் இந்த விலை உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மண்ணெண்ணெய் விலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
எளிய மக்களின் வீடுகளில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கையும் அனைத்துவிட மத்திய அரசு முயல்வது கண்டனத்திற்குரியதாகும். இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என தெரிவித்துள்ளனர்.