வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 11 மார்ச் 2015 (13:12 IST)

முன்பதிவு செய்யப்பட்ட கார்கள் வாங்குவதற்கான கையேடு மற்றும் டிப்ஸ்

Advertorial

புதிய கார் வாங்க வேண்டும். ஆனால் பணமும் மிச்சமாக வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
 
அப்படியானால் முன்பதிவு மட்டும் செய்யப்பட்ட அல்லது டெமோ ஓட்டம் மட்டும் எடுத்துச் செல்லப்பட்ட கார்கள் வாங்குவதன் மூலம் உங்களுடைய சில ஆயிரங்களை சேமிக்கலாம்.
 
கார் வாங்க, புதிய கார் வாங்குவது அல்லது பயன்படுத்தப்பட்ட (Second Hand) கார் வாங்குவதைத் தவிர்த்து மூன்றாவது வழி உண்டு. டீலர்களிடம் டெமோவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட புத்தம் புதிய கார்கள் இருக்கும். மேலும், முன்பதிவு செய்யப்பட்ட கார்களும் இருக்கும். அவைகளை வாங்குவதுதான் அந்த மூன்றாவது வழி ஆகும்.
pre-registered car
முன்பதிவு செய்யப்பட்ட கார்கள் என்றால் என்ன?
 
முன்பதிவு செய்யப்பட்ட கார்கள் என்பது டீலர்கள், தங்களுடைய பெயரில் பதிவு செய்யும் புத்தம் புதிய கார்கள் ஆகும். இதில் டீலர்கள் தான் அந்த கார்களின் முதல் ஓனர். அந்த கார்களின் பத்திரங்கள், விவரங்கள் அனைத்தும் (Documents) டீலர் பெயரிலேயே இருக்கும். இந்த கார்களுக்கு ஏற்கெனவே நம்பர் ப்ளேட்கள் இருக்கும். பொதுவாக டீலர்கள் செயற்கையான இதுபோன்ற முன்பதிவுகளை செய்வதுண்டு. காரணம் உற்பத்தியாளர்கள் விதிக்கின்ற விற்பனை வரம்பை எட்டுவதற்காக இது போன்ற முன்பதிவுகள் நடைபெறுகின்றது.
 
சட்டப்படி பார்த்தால் இவை Second Hand கார்கள் தான். ஆனால் அவை பதிவு செய்யப்பட்டு ஒரு வாரம் மட்டுமே ஆகியிருக்கும் அல்லது மிகச் சில கி.மீட்டர்கள் மட்டுமே ஓடியிருக்கும். இப்போது நீங்கள் புதிய காரை பதிவு செய்கிறீர்கள் என்று சொன்னால், அந்த கார் டெலிவரிக்காக ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் முன்பதிவு செய்யப்பட்ட கார்களை நீங்கள் அப்போதே வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடலாம். டீலர்களும் தங்களுடைய இருப்பைக் (Stock clearance) குறைக்க வேண்டும் என்பதற்காக இவ்வகையான கார்களை நல்ல தள்ளுபடி விலையில் தருவார்கள்.
 
மேலும் அடுத்த பக்கம்..

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவைகள்:
 
டீலரை சந்திப்பதற்கு முன்பாக உங்களுக்கு எந்த மாதிரியான கார் வேண்டும். உங்களுடைய எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன என தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
 
டீலர்களிடம் தள்ளுபடி கேட்கும்போது உங்களுடைய தன்னம்பிக்கையை தளர விடாதீர்கள்.
 
டீலர்களுடைய விளம்பரத்தை ஆதாரமாக கையில் வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, வாரண்டி நினைவில் இருக்கட்டும்.
 
பதிவுச் சான்றிதழ் பெறாமல் ஷோரூமை விட்டு வெளியேறாதீர்கள்.
 
காருக்கான வாரண்டியை மாற்றுவதற்கான எழுத்துப்பூர்வமான ஆதாரத்தைப் பெற மறந்து விடாதீர்கள்.
 
பலன்கள்:
 
எந்த தேய்மானமும் இல்லாத புத்தம் புதிய கார் வாங்க முடிகிறது.
 
இவ்வகையான கார்களை டெமோ பார்ப்பவர்கள் ஏதேனும் குறைபாடுகள் ஏற்படுத்தியிருந்தால் அவை டீலர்கள் மூலமே சரி செய்யப்படும்.
 
காத்திருக்க வேண்டிய காலம் மிச்சம். நீங்கள் வேகமாக காரை டெலிவரி எடுக்க முடியும்.
 
முன்பதிவு செய்யப்பட்ட கார்களுக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கும்.
 
பேசி விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
 
Extra fitting என்று சொல்லப்படும் இதர உதிரி பாகங்களைப் பேசி வாங்கலாம். நீங்களாக கேட்காவிட்டால், எதுவும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க!
 
பாதகங்கள்:
 
என்ன இருந்தாலும் நீங்கள் முதல் ஓனர் கிடையாது. எனவே மறுவிற்பனை மதிப்பு (Resale value) குறைவுதான்.
 
நீங்கள் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால், டீலர்கள் முன்பதிவு கார்கள் என்று காட்டுவதை மட்டுமே நீங்கள் தேர்வு செய்ய முடியும்.
 
சில நேரங்களில் டெமோ கார்களே சில நூறு அல்லது ஆயிரம் கி.மீட்டர்கள் ஓடியிருக்கும். அவை நமக்கு புதிய கார் என்ற உணர்வைத் தராது.
 
எப்படியிருந்தாலும் முன்பதிவு செய்யப்பட்ட கார்கள் பயன்படுத்தப்பட்ட கார்களே!
 
உங்கள் தேவைக்கு ஏற்றவாறு நீங்கள் அவற்றை வடிவமைக்க முடியாது. அங்கு எதைப் பார்க்கிறீர்களோ அவற்றிலிருந்துதான் நீங்கள் தேர்வு செய்ய முடியும்.
 
காரின் உள், வெளிப்பகுதிகளை முழுமையாக சோதனை செய்து விட வேண்டும். முன்பதிவு செய்யப்பட்ட கார்களிலும் சில பழுதுகள் இருக்க வாய்ப்புண்டு.
 
பதிவு செய்யப்பட்ட நாளைப் பொருத்து, வாரண்டி, சாலை வரி (Road Tax) மற்றும் ப்ரேக் டவுன் கவர் ஆகியன குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
 
மேலும் விவரங்களுக்கு http://autoportal.com/usedcars/