ரூ.4,999 விலையில் ஸ்வைப் கொன்னெக்ட் பிளஸ் ஸ்மார்ட்போன்
ரூ.4,999 விலையில் ஸ்வைப் கொன்னெக்ட் பிளஸ் ஸ்மார்ட்போன்
ஸ்வைப் நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் கொன்னெக்ட் பிளஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
டூயல் சிம் ஆதரவு கொண்ட ஸ்வைப் கொன்னெக்ட் பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்வைப் கொன்னெக்ட் பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 2ஜிபி ராம், 1.2GHz குவாட் கோர் மீடியாடெக் ப்ராசசர் மூலம் இயங்குகிறது.
இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, எல்இடி ஃபிளாஸ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா, 3000mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.4,999 விலையில், கருப்பு வண்ணத்தில் ஸ்நாப்டீல் இணையதளம் வழியாக பிரத்யேகமாக கிடைக்கிறது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்