வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (11:28 IST)

பண்டிகை கால சிறப்பு கார்கள் - உங்கள் பார்வைக்கு

இந்த பண்டிகை கொண்டாட்டங்களை மையப்படுத்தி பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் 2 வீலர் மற்றும் கார்கள் அறிமுகம் செய்யப்படும். இந்த வகையில், இந்த ஆண்டும், பல்வேறு கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 


 
 
இந்த 2016-ஆம் ஆண்டின் பண்டிகை காலங்களில், இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி கொண்டிருக்கும் சில கார்கள்:
 
ரெனோ க்விட் ஏஎம்டி:
 
ரெனோ நிறுவனம், இந்த ரெனோ க்விட் மாடலின் ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடைய மாடலை, இந்த பண்டிகை காலங்களின் போது அறிமுகம் செய்யப்படலாம். 
 
ரெனோ க்விட் மாடலில் சேர்க்கப்படும் ஈஸி-ஏஎம்டி எனப்படும் தொழில்நுட்பம், எஃப் டீம் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
 
ரெனோ க்விட் ஏஎம்டி மாடல், பிரத்யேக டயல் மற்றும் ரோட்டரி கியர் ஷிஃப்ட் கொண்டிருக்கும். இந்த ரெனோ க்விட் ஏஎம்டி, 1.0 லிட்டர் எஸ்சிஇ இஞ்ஜின் கொண்டிருக்கும். இந்த இஞ்ஜின், 67 பிஹெச்பியையும், 91 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.
 
எதிர்பார்க்கப்படும் விலை: 4 லட்சம் ரூபாய் 
 
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: அக்டோபர் 2016
 
டாடா கைட் 5:
 
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் டியாகோ ஹேட்ச்பேக் மூலம் பெற்ற வெற்றியினால் மகிழ்ச்சியில் உள்ளது. டாடா நிறுவனம், தங்களின் டாடா கைட் 5 சப்-காம்பேக்ட் செடானை அடிக்கடி சோதனைகளை மேற்கொண்டு வருவதை பார்த்தால், இது இந்த பண்டிகை காலங்களின் போது நிச்சயம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
டாடா கைட் 5 சப்-காம்பேக்ட் செடான், டியாகோ வடிவமைக்கப்பட்ட பிளாட்ஃபாரமை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. 
 
டாடா கைட் 5, பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என இரு விதமான இஞ்ஜின் தேர்வுகளுடன் வெளியாகிறது. டாடா கைட் 5 மாடலுக்கான 1.2 லிட்டர் ரெவோட்ரான் இஞ்ஜின், 3-சிலிண்டர்கள உடைய எம்பிஎஃப்ஐ இஞ்ஜினாக இருக்கும். 
 
5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இதன் இஞ்ஜின், 84 பிஹெச்பியையும், 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும். 
 
டாடா கைட் 5 மாடலுக்கான இஞ்ஜின், 3-சிலிண்டர்கள உடைய 1.05 ரேவோ டார்க் இஞ்ஜினாக இருக்கும். 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இஞ்ஜின், 69 பிஹெச்பியையும், 140 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும்.
 
எதிர்பார்க்கப்படும் விலை: 4.5 லட்சம் ரூபாய் 
 
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: அக்டோபர் 2016
 
மாருதி சுஸுகி இக்னிஸ்: 
 
மாருதி சுஸுகி இக்னிஸ், அடிப்படையில் ஒரு கிராஸ்ஓவர் ஹேட்ச்பேக் ஆகும். ஆனால், இது எஸ்யூவி தன்மைகளை கொண்டுள்ளது. 
 
மாருதி சுஸுகி இக்னிஸ், பாடி கிளாட்டிங், வில் ஆர்ச் கிளாட்டிங் மற்றும் உயர்ந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் உடையதாக இருக்கும்.
 
மாருதி சுஸுகி இக்னிஸ், 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கிறது. மாருதி சுஸுகி இக்னிஸ், பிரிமியம் நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படும்.
 
எதிர்பார்க்கப்படும் விலை: 4 - 6 லட்சம் ரூபாய் 
 
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: நவம்பர் 2016
 
மாருதி பலேனோ ஆர்எஸ்: 
 
மாருதி நிறுவனம், தங்களின் பலேனோவின் ஆர்எஸ் வெர்ஷன் அல்லது ரேலி ஸ்போர்ட் வெர்ஷன் என அழைக்கப்படும் மாருதி பலேனோ ஆர்எஸ் மாடலை, அறிமுகம் செய்ய உள்ளது. 
 
மாருதி பலேனோ ஆர்எஸ் என்பது பலேனோவின் ஸ்போர்ட்டி வடிவம் ஆகும். மாருதி பலேனோ ஆர்எஸ், முன் பக்கத்திலும், பக்கவாட்டிலும், பின் பகுதியிலும் பாடி கிட் பெறுகிறது. மேலும், இதற்கு டியூன் செய்யப்பட்ட இஞ்ஜின் பொருத்தப்படலாம்.  
 
மாருதி நிறுவனம், இந்த மாருதி பலேனோ ஆர்எஸ் மாடலுக்கு 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் இஞ்ஜின் பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இஞ்ஜின், 111 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 175 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும்.
 
எதிர்பார்க்கப்படும் விலை: 6 - 7 லட்சம் ரூபாய் 
 
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: நவம்பர் 2016
 
ஃபோக்ஸ்வேகன் அமியோ டீசல்: 
 
ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், முன்னதாக தங்களின் அமியோ சப்-காம்பேக்ட் செடானை பெட்ரோல் வேரியன்ட்டில் அறிமுகம் செய்தனர். இதன் டீசல் வேரியன்ட்டை, இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளனர்.
 
ஃபோக்ஸ்வேகன் அமியோ, போலோ பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 2 மாடல்களுக்கும் ஒரே இஞ்ஜின் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது. 
 
ஃபோக்ஸ்வேகன் அமியோ டீசல் மாடலுக்கு, 1.5 லிட்டர் டிடிஐ இஞ்ஜின் பொருத்தப்படலாம். இந்த இஞ்ஜின், 89 பிஹெச்பியையும், 230 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.
 
எதிர்பார்க்கப்படும் விலை: 6.5 - 8.5 லட்சம் ரூபாய் 
 
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: அக்டோபர் 2016
 
டாடா நெக்ஸன்: 
 
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களின் கார்களின் வடிவமைப்பில் புதிய அணுகுமுறையை பின்பற்ற துவங்கிவிட்டனர். இந்த மாற்றம், டியாகோவின் ஸ்டைல் நிரந்த வடிவமைப்பிலேயே காண முடியும். 
 
டாடா மோட்டார்ஸ், வழக்கமாக தங்களின் எஸ்யூவிகளுக்கும் மிகவும் புகழ் பெற்றுள்ளது. இந்த டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகத்தின் மூலம், இழந்த சந்தையினை மீண்டும் கைப்பற்ற நினைக்கின்றனர்.
 
நல்ல விகிதாசாரத்துடன் வடிவமைக்கப்பட்ட டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 
 
எதிர்பார்க்கப்படும் விலை: 6.5 - 9 லட்சம் ரூபாய் 
 
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: நவம்பர் 2016