வீடு தேடி வந்து ரூ.2000 கொடுக்கும் ஸ்நாப்டீல்


Abimukatheesh| Last Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (18:48 IST)
ஸ்நாப்டீல் நிறுவனம் என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் வீடு தேடி வந்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுபாடு நிலவுகிறது. ஏடிஎம் மற்றும் வங்கிகளில் பணம் இல்லாததால் பொதுமக்கள் பணம் எடுக்க வெகு நேரம் காத்து கிடக்கின்றனர்.
 
பிக் பஸார் மற்றும் பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் ரூ.2000 நோட்டு கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் வங்கிகளிலே பணம் தட்டுபாடு இருப்பதால் வேறு எங்கும் கிடைப்பதில்லை. இந்நிலையில் ஸ்நாப்டீல் நிறுவனம் cash@home என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது.
 
ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் ஸ்நாப்டீல் நிறுவனம், தற்போது நிலவி வரும் பணப்புழக்க தட்டுப்பாட்டை குறைக்க வீட்டுக்கே வந்து ரூ.2000 தருவதாக அறிவித்துள்ளது. ஸ்நாப்டீல் ஆப்பில் இருக்கும் cash@home வசதியை பயன்படுத்தி ரூ.2000 பணம் பெற்றுக்கொள்ளலாம்.
 
இதில் புக்கிங் செய்பவர்களுக்கு வீடு தேடி வந்து பணம் கொடுக்கப்படும் என்றும், அதற்கு ரூ.1 சேவை வரியாக வசூலிக்கப்படும் என்று அதன் நிறுவனர் தெரிவித்தார். மேலும் இந்த சேவை பெங்களூர் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் இந்த சேவையை எதிர்பார்க்கலாம்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :