வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 4 மார்ச் 2015 (13:46 IST)

குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைப்பு

ரிசர்வ் வங்கி, குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்து உத்தரவிட்டுள்ளது.
 
தற்போது 7.75 சதவிகிதமாக உள்ள வட்டி விகிதத்தில் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டதன் மூலம் 7.5 சதவிகிதமாக வட்டி விகிதம் குறைந்துள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி 15 ஆம் தேதியன்று 8 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 7.75 சதவிகிதமாக இருந்தது.
 
2 மாதத்தில் 2ஆவது முறையாக வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது
 
பணவீக்கம் குறைந்துள்ளதாலும், விலைவாசி குறைந்துள்ளதாலும் வட்டி விகிதத்தை குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
 
இதனால் வீடு மற்றும் வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.