செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Annakannan
Last Modified: புதன், 5 நவம்பர் 2014 (12:53 IST)

புதிய உச்சம்: சென்செக்ஸ், 28 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு, முதன்முறையாக இன்று 28 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. இதேபோன்று தேசிய பங்குச் சந்தையில் நிப்டி குறியீடு 8,368 புள்ளிகளைத் தொட்டு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
 
இன்று காலை 9.58 மணிக்கு சென்செக்ஸ் குறியீடு 28,006.02 என்ற புதிய உச்ச மதிப்பைத் தொட்டது. ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றுடனான அனைத்துப் பிரிவிலும் 1.50 சதவீத லாபத்துடன் வர்த்தக நடவடிக்கை சாதகமாக இருந்தது. 
 
28 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தாலும், பங்குகள் அதிகமாக விற்பனையானதால், 100க்கும் மேலான புள்ளிகள் குறைந்து, 27,900 என்ற அளவில் சென்செக்ஸ் குறியீடு ஏறி இறங்கியவாறு உள்ளது.
 
இந்த உயர்வுக்கு, தொடர்ச்சியாக வெளிநாட்டு நிதி வருவது, தொடர்ச்சியாக சில்லரை முதலீட்டாளர்கள் வாங்குவது, அரசு மேற்கொண்ட தொடர்ச்சியான பொருளாதாரச் சீர்திருத்த முயற்சிகள், புளூ-சிப் நிறுவனங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமான வருவாய் ஈட்டியது உள்ளிட்ட பல காரணங்களை சந்தை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
பங்குச் சந்தைகளின் வளர்ச்சி, முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.