1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2018 (14:18 IST)

நஷ்டத்தில் தத்தளிக்கும் எஸ்பிஐ: கோடிக்கணக்கில் இழப்பு....

நாட்டின் முக்கிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
கடந்த 1999 ஆம் ஆண்டு ரூ.155 கோடி இழப்பை எஸ்பிஐ வங்கி சந்தித்து இருந்தது. அதன் பிறகு சுமார் 18 ஆண்டுகளுக்கு மேலாக இழப்பை சந்திக்காமல் இருந்த நிலையில், கடந்த காலாண்டில் நஷ்டம் அடைந்துள்ளது.  
 
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிந்த 3 ஆம் காலாண்டில் ரூ.2416 கோடி அளவு இழப்பை எஸ்பிஐ சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வங்கியின் வாராக்கடன் ரூ.23,000 கோடியாக அதிகரித்ததுள்ளதாம்.
 
இது குறித்து எஸ்பிஐ அதிகாடி ஒருவர் கூறியதாவது, ஏறக்குறைய ரூ.25,830 கோடி கடன்கள் வாரா கடனாக மாறிவிட்டது. அடுத்து வரும் காலாண்டுகளில் வாராக்கடன் அளவை குறைக்க சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம். 
 
கடன் கொடுத்தவர்களின் கடனை திருப்பி வசூலிப்பதில் கடுமையான நிலைப்பாட்டை எஸ்பிஐ வருகிறது. பெரு நிறுவனங்கள் மீது திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 
 
குறிப்பாக மின் திட்டங்களுக்கு கொடுத்த கடன் திரும்ப வசூலிப்பதில் ஏற்பட்ட சுனக்கமே இவ்வளவு கடனுக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.