வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 மார்ச் 2017 (11:05 IST)

ரிலையன்ஸ் ஜியோ இலவசம் குறித்த வதந்திகள்: பயனர்களே கவனம்!!

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களே ஒரு நாள் டேட்டா 10 ஜி.பி.யாக உயர வேண்டுமா என்ற மெஸேஜ் வந்திருந்தால் கவனமாக இருக்கவும். 


 
 
இது ஒரு வதந்தி. அதுமட்டுமல்லாம் மொபைலில் உள்ள தகவல்களை திருடுவதற்கான முயற்சி என்றும் கூறப்படுகிறது. 
 
முகநூலில் அந்த போலி மெஸேஜ் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.  இதற்கு http://upgrade-jio4g.ml/ லிங்க் கொடுக்கப்படுகிறது. 
 
இது பொய்யான தகவல் தான் என்றாலும் இதனால் பெரும் சிக்கல்கள் உருவாக கூடும். 
 
ரிலைன்யன்ஸ் ஜியோ வெல்கம் ஆஃப்ராக 2016 டிசம்பர் மாதம் வரை அன்லிமிடெட் டேட்டா அறிவிக்கப்பட்ட நிலையில், ஹேப்பி நியூ இயர் ஆஃப்ராக 2017 மார்ச் வரை அந்த இலவச டேட்டா மற்றும் இன்கமிங், அவுட்கோயிங் பயன்பாடு நீட்டிக்கப்பட்டது.
 
அதே நேரம் நாள் ஒன்றிற்கு 4 ஜிபி வரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை 1 ஜிபியாக குறைக்கப்பட்டது. ஒரே நாளில் 1 ஜிபியை தாண்டிவிட்டால், அதற்கு பிறகு இணையதளத்தின் வேகம் 128kbps ஆக குறைந்துவிடுகிறது இதுவே தற்போதய ஜியோ சேவையின் அதிகாரப்பூர்வ விவரம்.