Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரிசர்வ் வங்கி தொடர்பில் தபால் துறை: நன்மையா? தீமையா?


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:10 IST)
ரிசர்வ் வங்கி தொடர்பில் இயங்கும் தபால் துறை வங்கிகள் வரும் மார்ச் முதல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.362 கோடிக்கு செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் தபால் அலுவலகங்கள் மூலம் மாற்றப்பட்டுள்ளது.
 
மேலும், ரூ.2 ஆயிரத்து 577 கோடி மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகள் தபால் அலுவலக கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், 97 தபால் ஏடிஎம்-கள் சோதனை முறையில் நிறுவப்பட்டு, தொழில்நுட்ப ரீதியாக வெற்றி அடைந்துள்ளது. இதுவரை 1 லட்சம் ஏ.டி.எம். அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. 
 
இந்த மாத இறுதிக்குள் மேலும் 1 லட்சம் ஏடிஎம் அட்டைகள் வழங்கப்படும். இந்த ஏ.டி.எம். அட்டைகள் மூலம் ஸ்டேட் பேங்க் ஏடிஎம்-களில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மார்ச் இறுதியில் தபால்துறை வங்கிகள் செயல்பாட்டுக்கு வரும். அதன் பிறகு, தபால்துறை வங்கி நேரடியாக ரிசர்வ் வங்கியுடன் தொடர்பு கொண்டு பண பரிமாற்றத்தில் ஈடுபட முடியும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :