சீன பொருட்கள் விலை குறைவாக விற்கப்படுவது ஏன்??


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (18:54 IST)
இந்தியாவில் சீன பொருட்கள் விலை குறைவாகவே விற்கப்படுகிறது. விளையாட்டு பொருட்களில் இருந்து காஸ்ட்லி ஸ்மார்ட்போன் வரை அனைத்தும் குறைந்த விலைக்கே விற்கப்படுகின்றன.

 
 
குறைந்த விலையில் விற்பனை செய்தால் உற்பத்தி நிறுவனத்திற்கு என்ன லாபம் இருக்கும் என்ற கேள்வி எழக்கூடும். அதிலும் இந்தியாவில் விற்பனை செய்யும் பொருட்களை விட சீன உற்பத்தி பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பது ஆச்சரியத்தையும் தரலாம்.
 
இதற்கு முக்கியமான காரணம் மானியம் மற்றும் விலை நிர்ணய வழி முறைகள். மேலும், சரியான நேரத்தில் கடன் கிடைப்பது, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாற்றிக்கொள்வது, உள்கட்டமைப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் பொருட்களின் தரம் ஆகிய காரணிகளும் விலை நிர்ணயத்தில் கணக்கு எடுக்கப்படும் என தெரிகிறது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :