1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By k.N.Vadivel
Last Updated : சனி, 12 செப்டம்பர் 2015 (02:03 IST)

ராமலிங்க ராஜு குடும்பத்தினர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட 7 வருடம் தடை

சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட செபி 7 வருடம் தடை வித்துள்ளது.
 

 
சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு, பங்கு வர்த்தகத்தில் சுமார் ரூ. 7,000 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. ஆரம்பத்தில் இதனை மறுத்துத வந்த ராமலிங்க ராஜூ, பின்பு இதனை ஒப்புக் கொண்டார்.
 
இதனையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், அவர் குற்றவாளி என உறுதிபடுத்தப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், ராமலிங்க ராஜுவும், அவருடைய உறவினர்களும் சுமார் 7 வருடங்களுக்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என்று செபி தடை விதித்துள்ளது.
 
செபி உத்தரவின்படி ராமலிங்க ராஜுவின் மனைவி, இரண்டு மகன்கள், ராஜுவின் சகோதரர், அவரது மனைவி, சத்யம் நிறுவனத்தின் அன்றைய இயக்குநர்கள், ராஜு சகோதரர்கள் மூலம் நிர்வாகம் செய்யப்பட்ட 2 நிறுவனங்கள் உள்ளிடவர்கள் சுமார் 7 வருடத்திற்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியாது என்பது குறிப்பிடதக்கது.