வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 4 நவம்பர் 2015 (07:52 IST)

பருப்பு வகைகளின் விலை குறையும்: அருண் ஜேட்லி

பருப்பு வகைகள் விலை கணி்சமாக குறையும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.


 

 
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அருண் ஜேட்லி, பாஜக ஆட்சியில்  உணவுப் பொருட்களின் விலைவாசி  உயர்ந்து விட்டது என்ற புகாரை மறுத்து பேசினார்.
 
இந்த ஆண்டு, பருப்பு அறுவடை சிறப்பாக இருக்கும் என்ற தகவல்கள் வந்துள்ளதாகவும் எனவே பருப்பின் விலை குறையும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
 
மேலும், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பணவீக்கம் 12 சதவிகிதமாக இருந்ததாகவும் தற்போதய பாஜக ஆட்சியில் 4 சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும் அப்போது, அருண் ஜேட்லி கூறினார்.