செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 1 நவம்பர் 2017 (10:44 IST)

விலை உயரும் பொருட்கள்: நவம்பர் மாதம் காத்திருக்கும் ஆப்பு!!

உற்பத்தி மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாக சில பொருட்களின் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை எவை என இங்கு காண்போம்...


 
 
வீட்டு உபயோக பொருட்கள்:
 
உள்ளிட்டு செலவு 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால் குளிர்சாதன பெட்டி, ஏசி, வாசிங் மெஷின் ஆகிய பொருட்களின் விலை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை உயரும். 
 
ஹோட்டல் உணவு:
 
ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. எனினும் உணவுப் பொருட்கள் மீதான விலை உயரும் என்று கூறப்பட்டுள்ளதால், ஹோட்டல் உணவின் விலை 7 முதல் 10 சதவீதம் வரை உயரும்.
 
விமான கட்டணம்:
 
கச்சா எண்ணெய் விலை தற்போது 60 டாலர் வரை உயர்ந்துள்ளது. இதனால் விமான கட்டணங்களுக்கான விலையும் 10 முதல் 15 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.  
 
பெட்ரோல் மற்றும் டீசல்:
 
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரனத்தால், பெட்ரோல் 7.8 ரூபாய் வரையிலும், டீசல் 5.7 ரூபாய் வரையிலும் விலை அதிகரிக்கும்.