1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 14 ஜனவரி 2016 (11:51 IST)

பொங்கல் பண்டிகை: விற்பனைக்கு குவிந்த கரும்புகள்

பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பும் மஞ்சளும் அதிக அளவில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.



 


 
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்திலுள்ள சந்தைகள் மற்றும் கடைகளில் கரும்பு, மஞ்சள், உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
 
சேலம், கடலூர், தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்புகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றது.
 
இந்த ஆண்டு கரும்புகளின் விலை அதிமாக இருப்பதால் பொதுமக்கள் குறைந்த எண்ணிக்கையிலான கரும்புகளை மட்டுமே வாங்கிச் செல்கின்றனர்.
 
ஒரு கட்டு கரும்புகள் 600 ரூபாய்க்கும் ஒரு கரும்பின் விலை ரூ.30 முதல் 45 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.
 
இதேபோல், மஞ்சள் கிழங்கும் சந்தைகளில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
 
பொங்கல் பண்டிகைக்கு கரும்பும் மஞ்சளும் முக்கியப் பொருளாகக் கருதப்படுவதாவல் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.