Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிஎப் பணத்தை பத்தே நாட்களில் பெறலாம்!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 17 மே 2017 (16:49 IST)
வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நாட்களை தற்போது குறைத்துள்ளது. 

 
 
2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎப் திட்டத்தில் இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நாட்களை 45 நாட்களில் இருந்து 20 நாட்களாகக் குறைத்தது. தற்போது இது குறைந்தபட்சம் 10 நாட்களாகவும், அதிகபட்சம் 15 நாட்களாகவும் இருக்குமென அறிவித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆன்லைனிலேயே பிஎஃப் செட்டில்மெண்ட் கோரி விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியது.

பிஎஃப் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தொழிலாளர் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வுகாணும் வகையில், பிஎஃப் செட்டில்மெண்ட் கோரிக்கைகள் பெறப்பட்டு 10 நாட்களிலேயே வழங்கப்படும். பிற குறைகள் தொடர்பான மனுக்கள் மீது 15 நாட்களில் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :