1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 1 ஆகஸ்ட் 2015 (19:31 IST)

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 52 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 78 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
 
அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.67.29 ல் இருந்து ரூ.64.77 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.51.08 ல் இருந்து ரூ.47.30 ஆகவும் குறைக்கப்பட்டது.
 
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 43 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 60 காசுகளும் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
 
இந்நிலையில், மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டது. அதன்படி, 14.2 கிலோ கொண்ட சிலிண்டருக்கு டெல்லியில் ரூ.23.50 குறைக்கப்பட்டது. அதன்படி, மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் ரூ.608.50 ல் இருந்து ரூ.585 ஆக குறைக்கப்பட்டது.
 
ஆனால், மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.