1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2015 (18:24 IST)

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டடுள்ளது. இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
 
பெட்ரோல் லிட்டருக்கு 80 காசுகளும், டீசல் லிட்டருக்கு 1.ரூபாய் 30 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த மார்ச் 1 ஆம் தேதி நள்ளிரவு முதல் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.46, டீசல் விலையும் ரூ.3.34 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இதன் விலை குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.