வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (09:41 IST)

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.
 
15 நாட்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை  மாற்றியமைத்து வருகின்றன.
 
இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் பீப்பாய் ஒன்றுக்கு 44 டாலரில் இருந்து 28 டாலராக குறைந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகளும் குறைத்திருப்பதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
 
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.63.20 ல் இருந்து ரூ.61.20 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசலின் விலை 44.95 ரூபாயிலிருந்து ரூ.44.45க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 3 காசு குறைக்கப்பட்டு ரூ.63.49 ல் இருந்து ரூ.61.46 க்கு விற்பனை செய்யப்படுகிறது.