விலை குறைந்தது ஒப்போ ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா?

Last Updated: வெள்ளி, 14 ஜூன் 2019 (13:34 IST)
ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் A1k, A5s என்ற தனது இரண்டு ஸ்மார்ட்போன் மாடல் மீது விலை குறைப்பை அறிமுகம் செய்துள்ளது. 
 
சமீப காலங்களாக ஸ்மார்ட்போன்கள் மீது அதிக சலுகைகளும், விலை குறைப்புகளும் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது. எப்படியேனும் ஒரு நாளைக்கு ஒரு ஸ்மார்ட்போனின் விலையாவது குறைக்கப்பட்டு விடுகிறது. 
 
அந்த வகையில் தற்போது ஒப்போ நிறுவனம் தனது A1k, A5s ஸ்மார்ட்போன்கள் மீது ரூ.1,000 ரூபாய் வரை விலை குறைத்துள்ளது. இந்த புதிய விலை விவரங்கள் அமேசானில் அறிவிக்கப்பட்டள்ளது.
மேலும், ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள்  amazon.in ஆன்லைன் ஷாப்பிங் மூலம் பெற்றுக் கொள்ளலாம். விலை விவரம் பின்வருமாறு...
 
1. 2 ஜிபி ராம் ஒப்போ A1k விலை ரூ.8,490; ஆஃபர் விலை ரூ.7,990 
2. 2 ஜிபி ராம் ஒப்போ A5s விலை ரூ.8,990; ஆஃபர் விலை ரூ.7,990 
3. 3 ஜிபி ராம் ஒப்போ A5s விலை ரூ.9,990; ஆஃபர் விலை ரூ.8,990 


இதில் மேலும் படிக்கவும் :