வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 3 மார்ச் 2017 (11:00 IST)

ஏடிஎம்-களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம் கிடையாது: வதந்திக்கு வங்கி முற்றுப்புள்ளி

ஏடிஎம்-களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 வசூலிக்கப்படும் என சில ஊடகங்களில் தவறான செய்திகள் பரவியது. இதையடுத்து ஹெச்.டி.எப்.சி. வங்கி அதை மறுத்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



 

 
இந்தியாவின் முன்னணி வங்கிகளான ஐசிஐசிஐ, ஆக்சிஸ் மற்றும் ஹெச்.டி.எப்.சி வங்கிகள் பரிவர்த்தனையில் புதிய கட்டுபாடுகளை நேற்று அறிவித்தது. வங்கிகளில் 4 முறைக்கு மேல் பணம் செலுத்தினாலோ, எடுத்தாலோ ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்தது.
 
ஆனால் ஏடிஎம்-களில் பணம் எடுப்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் சில ஊடகங்களில் ஏடிஎம்-களில் ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என செய்திகள் வெளியாகின.
 
இதற்கு மறுப்பு தெரிவித்து ஹெ.டி.எப்.சி. வங்கி இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தனது வாடிக்காயாளர்களுக்கு அனுப்பி உள்ளது. அதில் கட்டணம் எதற்காக, எவ்வளவு வசூலிக்கப்படும் என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருத்தி அமைக்கப்பட்ட கட்டணங்களில் விபரம் அறிய கீழூ கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை க்ளிக் செய்யவும்