பணப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை முழுமையாக நீக்கிய தனியார் வங்கி

HDFC
Abimukatheesh| Last Updated: திங்கள், 6 நவம்பர் 2017 (19:39 IST)
இந்திய தனியார் வங்களில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க RTGS மற்றும் NEFT பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை முழுமையாக நீக்கியுள்ளது.

 

 
மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் RTGS மற்றும் NEFT பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை முழுமையாக நீக்கியுள்ளது. ஆனால் காசோலை மீதான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
 
இந்த கட்டண நீக்கம் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. சேமிப்பு கணக்கு மற்றும் சம்பள கணக்குகள் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் IMPS பரிவர்த்தனைகளுக்காக கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. 
 
குறிப்பாக வாடிக்கையாளர்கள் தற்போது IMPS பரிவர்த்தனையே பயன்படுத்தி வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :