வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 1 ஜூன் 2016 (16:38 IST)

வட்டியில்லா இஎம்ஐ வசதி: ப்ளிப்கார்ட் தகவல்

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் வட்டியில்லா தவணைத் திட்டத்தை ப்ளிப்கார்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.


 

 
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னிலை வகித்து வரும் நிறுவனம் மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வட்டியில்லா தவணைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
பொதுவாக இஎம்ஐ மூலம் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் வட்டித் தொகை செலுத்த வேண்டியதாக இருந்தது. ஆனால் தற்போது 5000 ரூபாய்க்கு மேல் போருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வட்டியுடன் தவணைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
மேலும் ஸ்மார்ட்போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதர்காகவும், அதிகரிக்கவும் இதுபோன்ற முறையை அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இனி யார் வேண்டுமானாலும் எளிமையாக தவணை முறையில் கவலை இல்லாமல் ஆன்லைனில் ப்ளிப்கார்ட் மூலம் பொருட்கள் வாங்கலாம். ஆனால் பொருட்களின் விலை பற்றி எதுவும் குறிப்பிடபடவில்லை.
 
மாத தவணையை பஜாஜ் பின்சர்வ் மற்றும் முக்கிய பிராண்டுகளுடன் இணைந்து சரி செய்து கொள்ளப்படும் என்று ப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.