Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மோடி அறிவிப்பு: நிலைகுலைந்த 8 தொழில் துறைகள்!!

Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (16:30 IST)

Widgets Magazine

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதினால் கருப்பு பணத்தை ஒழிக்கலாம் என்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக பிரதமர் மோடி சில அறிவிப்புகளை வெளியிட்டார். 


 
 
இந்தப் பழைய ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து பல அரசு மற்றும் தனியார் துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்துத் துறைகளில் வர்த்தகமும் பாதிக்கப்படுட்டுள்ளன அவற்றில் சில....
 
இ காமர்ஸ்:
 
இ காமர்ஸ் துறைகளின் வர்த்தகம் 60 முதல் 70 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதற்கான காரணம் கேஷ் ஆண் டெலிவரி சேவையில் ஏற்பட்ட பாதிப்பு.
 
ஸ்மார்ட்போன்: 
 
ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்  பணத்தட்டுபாட்டினாலும் போன்களை வாங்காததாலும் மோசமான வியாபாரத்தை எதிர்கொண்டுள்ளனர். 
 
இதனால் பல போன் நிறுவனங்கள் புதிய போன் தயாரிப்புகளின் வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளனர்.
 
ஆடோமொபைல்: 
 
நவம்பர் மாதம் கார், பைக் போன்ற வாகனங்கள் விற்பனை பாதியாக குறைந்து மோசமான நிலையில் வர்த்தகத்தை கொண்டுள்ளது.
 
போக்குவரத்து: 
 
வெளிநாடு பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் சீசனில் போக்குவரத்து நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 
 
உணவு:
 
டெல்லி என்சிஆரில் உணவகங்கள், பார்கள் போன்றவற்றிலும் விற்பனை 28 சதவீதம் வரை குறைந்துள்ளது.
 
திரையரங்குகள்: 
 
திரையரங்குகள் டிக்கெட்களை இணையதளம் மூலம் புக் செய்தாலும், பழைய ரூபாய் நோட்டுகளால் திரையரங்கு உறிமையாளர்களும், சினிமா தயாரிப்பாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
தங்கம் விற்பனை:
 
ஒரு நாளைக்குச் சராசரியாக 125 கோடி ரூபாய்க்குத் தங்கம் விற்கப்படும். ஆனால் இந்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பில் இருந்து விற்பனை 13 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது.
 
நுகர்பொருட்கள்: 
 
நுகர்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் வர்த்தகம் 20 முதல் 30 சதவீதமும், கிராமப்புற கடைகளில் 40 முதல் 45 சதவீதமும் வியாபாரம் குறைந்துள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அம்பானியின் மாஸ்டர் ப்ளான்: ஜியோ பயனர்களே உஷார்!!

முகேஷ் அம்பானியின் தலைமையின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோ சிம் அட்டைகளை விற்பதை நோக்கமாக ...

news

மோடியின் அறிவிப்பால் 3 நாட்களில் ஒரு லட்சம் ஐபோன்கள் விற்பனை

கருப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு ...

news

போட்டிபோட்டு ரூ.2,306 கோடி நஷ்டத்தை சம்பாதித்த ஃபிளிப்கார்ட்!!

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஃபிளிப்கார்ட் நிறுவனம், கடந்த 2015-16ம் நிதியாண்டில் ...

news

ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு டிசம்பர் சர்ப்ரைஸ்!!

ரிலையன்ஸ் ஜியோ அதன் முன்னோட்ட ஆஃபரை நிறுத்தி வரம்பற்ற 4ஜி தரவு மற்றும் குரல் அழைப்புகள் ...

Widgets Magazine Widgets Magazine