வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2015 (18:44 IST)

லிட்டருக்கு 48.2 கி.மீ. மைலேஜ்: மாருதி ஸ்விஃப்ட் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் ஹைப்ரிட் கார்

சமீபத்தில் ஸ்விஃப்ட் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் ஹைப்ரிட் காரை டெல்லியில் நடைபெற்ற சர்வதேச பசுமை வாகனம்-2015 என்ற கண்காட்சியில் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்தது.
Maruti Swift Range Extender
இதே வாகனம், டெல்லியில் 2014ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் கார்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் வகையாகும். 25.5 கி.மீ. வேகத்தில் ஓட்டினால் இந்த கார், லிட்டருக்கு 48.2 கி.மீ. மைலேஜ் கொடுக்கும். ஸ்விஃப்ட் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் கார் அரசுப் பணிகளுக்கு மட்டுமே கையளிக்கப்படும் என்றும், தனியார் அல்லது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்படாது என்றும் தெரிகிறது.
 
658CC சக்தி கொண்ட 3 சிலிண்டர் எஞ்சின் மற்றும் 73bhp மோட்டார் கொண்டது இந்த கார். மேலும் இந்த வாகனம், ஹைப்ரிட், சீரியஸ்-ஹைப்ரிட் மற்றும் முழுமையான எலெக்ட்ரிக் போன்ற 3 வகைகளைக் கொண்டது.
 
இந்த கார் 1,600 கிலோ கிராம் எடையுடன் 1.5 மணி நேரம் சார்ஜ் ஆகக் கூடிய லித்தியம் அயன் பேட்டரியைக் கொண்டுள்ளது. இதன் வோல்டேஜ் அளவு 200V. ஸ்விஃப்ட் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் ஹைப்ரிட் கார்கள், அறிவிப்பு வசதிகள், புஷ் ஸ்டார்ட்/பட்டன் ஸ்டாப், பொத்தான் இல்லாத ரிமோட் வசதிகள் மற்றும் ரியர் டிஸ்க் ப்ரேக்களுடன் கூடியது.