Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

லாவா எக்ஸ் 38 ஸ்மார்ட்போன் வெளியீடு

லாவா எக்ஸ் 38 ஸ்மார்ட்போன் வெளியீடு


Sugapriya| Last Modified புதன், 10 ஆகஸ்ட் 2016 (11:07 IST)
லாவா ஸ்மார்ட்லாவா நிறுவனம் எக்ஸ் 38 என்ற தனது புதிய ஸ்மார்ட்போனை நிறுவனத்தின் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

 


டூயல் சிம் ஆதரவு கொண்ட லாவா எக்ஸ் 38 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயக்கப்படுகிறது. லாவா எக்ஸ்38 ஸ்மார்ட்போனில் 293ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.0 இன்ச் எச்டி ஆன்-செல் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயங்குகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. லாவா எக்ஸ்38 ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஸ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஸ் கொண்ட 2 மெகாபிக்சல் முன்  கேமரா, 4000mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.

லாவா எக்ஸ் 38 ஸ்மார்ட்போன் ரூ.6,599 விலையில் ஃபிலிப்கார்ட் இணையதளம் வழியாக பிரத்யேகமாக கிடைக்கும். 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :